சென்னையில் அடையார் சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது நடிகை நிவேதா பெத்துராஜியிடம் சிறுவன் ஒருவன் பணத்தை பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டான்.
வெள்ளித்திரையில் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வந்திருந்த நடிகை நிவேதா பெத்துராஜ் இவர் தமிழில் டிக் டிக் டிக் , திமிரு புடிச்சவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதுபோல தெலுங்கிலும் அல்லு அர்ஜுன் இணைந்து வைகுண்டபுரம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நிவேதா பெத்துராஜ் மதுரை சேர்ந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தீபாவளியையொட்டி நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். நீல நிற புடவை அணிந்து கையில் கம்பி மத்தாப்பு மூலம் புஷ்வான வெடியை வெடிக்க வைத்து நிவேதா பெத்துராஜ் பதிவிட்ட வீடியோ ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் அவரிடம் பணம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது
தன்னிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு ஸ்டோரி வெளியிட்டு உள்ளார் அதில் அவர் கூறியது ‛‛அடையார் சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டேன். முதலில் அந்த சிறுவன் என்னிடம் பணம் கேட்டான். இலவசமாக பணம் கொடுக்க நான் மறுத்தேன். இதையடுத்து அவன் புத்தகத்தை ரூ.50க்கு என்னிடம் விற்பனை செய்ய முயன்றான். நான் ரூ.100யை எடுத்தேன்.
இந்த வேளையில் சிறுவன் என்னிடம் ரூ.500 கேட்டான். அப்படியே ரூ.500 தாங்கனு கேட்டான். அப்போது நான் புத்தகத்தை அவனிடம் கொடுத்து ரூ.100யை மீண்டும் வாங்கினேன். இந்த வேளையில் புத்தகத்தை காருக்குள் வீசிய சிறுவன் என் கையில் இருந்த பணத்தை பறித்து கொண்டு ஓடிவிட்டான்.
மேலும் அந்த பதிவில் நிவேதா பெத்துராஜ்,‛‛ இப்படி ஆக்ரோஷமாக பிச்சை கேட்கும் பழக்கம் எல்லா இடத்திலும் இருப்பது உண்மையா? இந்த பிரச்சனையை நீங்கள் சந்தித்து உள்ளீர்களா?” எனவும் கேள்வி எழுப்பி Yes, No என்ற ஆப்ஷனையும் வழங்கி உள்ளார்.
இது போல சிறுவர்கள் வைத்து நூதன வழிப்பறி செய்கிறார்களா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.