Monday, November 11, 2024
-- Advertisement--

தமிழகத்திலும் இ – பாஸ் முறை ரத்து செய்வதா.? இல்லையா..? மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா கிருமி பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இ -பாஸ் என்ற முறையை அறிமுகப்படுத்தினர்.

இதன் மூலம் திருமணங்கள், இறப்பு , மருத்துவ காரணங்களுக்கு மட்டும் பயன்படுத்த இ பாஸ் வழங்கப்பட்டது. கடந்த வாரம் முதல் தமிழகத்தில் கொரோனா பரவல் 3.50 லட்சத்தை தாண்டியது. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கட்டாயம் என்பதால் பலர் பாதிக்கப்படுகின்றன. இந்த நிலையில் வாரம் முதல் இ -பாஸ் நடைமுறையில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டன. அதில் யார் விண்ணப்பித்தாலும் அடுத்த சில மணி நேரங்களில் அவர்களுக்கு இ -பாஸ் கிடைக்கும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் இ பாஸ் நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

அடுத்தடுத்து தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என பண்டிகைகள் வருவதால் தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த முடிவானது இன்று மாலை 3 மணிக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியாளரகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதால் இந்த கூட்டத்தின் மூலம் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்வதா இல்லையா என்பது குறித்து முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles