சமீபகாலமாக துல்கர் சல்மான் அவர்கள் நடித்த திரைப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவர் நடித்த ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் தமிழில் பெரிய வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதனை தொடர்ந்து தற்பொழுது துல்கர் சல்மானின் சீதா ராமம் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது இந்த படம் வெற்றியை கொடுத்ததா இல்லையா என்பதை விமர்சனத்தில் பார்ப்போம் வாங்க.
கதை:
பாகிஸ்தான் ராணுவத்தில் வேலை செய்யும் ராஷ்மிகா மந்தனாவின் தாத்தா இறப்பதற்கு முன் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ராம் என்பவர் 20 வருத்தத்திற்கு முன் எழுதிய கடிதத்தை சீதா மகாலட்சுமி அவர்களிடம் ஒப்படைக்க சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார். தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அரைமனதோடு அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு சீதாவிடம் சேர்ப்பதற்காக ராஷ்மிகா தேடி அலைகிறார் அப்போது தான் ராம் சீதா மகாலட்சுமி யார் என்பதும் அவர்கள் காதல் பற்றியும் ராஷ்மிகாவிற்கு தெரியவருகிறது.
எப்படியாவது இந்த கடிதத்தை சீதாவிடம் கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்த ராஷ்மிகா கடைசியில் சீதா மகாலட்சுமியிடம் கொண்டு சேர்க்கிறார் அதன்பின் என்ன நடந்தது என்பது தான் மனதை உறைய வைக்கும் காதல் கதையாக வெளியாகி உள்ளது.
சின்ன சின்ன ட்விஸ்ட் ரசிக்கவைக்கும் திரைக்கதையோடு இளமை துள்ளலுடன் ஆரம்பிக்கும் கதையை எமோஷனலாக முடிக்கிறார் இயக்குனர்.
துல்கர் சல்மான் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் எப்படி அவர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திகிறாரோ அதேபோல ராணுவ வீரராக நடித்து அசத்தியிருக்கிறார் அதுமட்டுமல்லாமல் காதல் காட்சிகளில் இளமை துள்ளல். கதாநாயகி மிருணாள் அவர்களை உருகி உருகி காதலிப்பது என்று தன்னுடைய நடிப்பால் வசீகரித்து உள்ளார் துல்கர்.
கதாநாயகி மிருணாள் மராத்தி படங்களில் நடித்து வந்த இவரை தெலுங்கில் அறிமுகம் செய்திருக்கிறார்கள் நடிப்பில் அசத்தி இருக்கிறார். காதல் காட்சிகளிலும் சரி எமோஷனல் காட்சிகளும் சரி நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்.
ராஷ்மிகா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து உள்ளார். கவர்ச்சி இல்லாமல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் நடிகை.
கவுதம் மேனன் பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்கள் அவரவர் கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துக் கொடுத்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் பிஎஸ் வினோத் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா இருவரும் காஷ்மீரின் அழகை கண் முன் வந்து நிறுத்துகின்றனர் குறிப்பாக கேமரா ஆங்கில் மற்றும் ஒளிப்பதிவு செய்த விதம் அனைத்தும் கச்சிதமாக இருந்தது.
இயக்குனர் ஹனு ராகவா புடி சினிமாவிற்கு கிடைத்த இன்னும் ஒரு தரமான இயக்குனர். 1964 கதைக்களத்தில் நடக்கும் அருமையான காதல் கதையை ரசிகர்கள் ரசிக்கவைத்து படம் முடிந்து வெளியில் வரும் போது அந்த கதாபாத்திரங்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும் படி செய்தது தான் அவருடைய வெற்றி. அந்த அளவிற்கு கதை மற்றும் காட்சியமைப்பில் மெனக்கெட்டு உள்ளார் மனிதர். HATS OFF
பிளஸ் :
இரண்டாம் பாதி
துல்கர் சல்மான் நடிப்பு
அருமையான ஒளிப்பதிவு
தெலுங்கு படத்தை தமிழ் படம் போல டப் செய்த விதம்.
இயக்குனரின் தரமான இயக்கம்
மைனஸ்:
ஒன்றும் சொல்லும் அளவிற்கு பெரிதாக இல்லை.
மொத்தத்தில் முதல் பாதி நன்றாக இருந்தாலும் மெதுவாக செல்லும் காட்சிகள் ஸ்பீட் பிரேக் ஆனால் இடைவேளை ட்விஸ்ட்க்கு பின் தொடர்ந்து வரும் இரண்டாம் பாதி ரசிகர்களை கட்டிப்போட்டு இது தான் டா காதல் என்று உருக வைத்து ரசிக்க வைத்து கண்கலங்க வைத்து அனுப்புகிறது. தியேட்டரை விட்டு வெளியே வரும் போது ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி.
சீதா ராமம் அழகிய காதல் காவியம்
Rating: 4/5
Verdict: Blockbuster Romantic Hit