கொரோனா உலக நாடுகளை நடுங்க வைத்த வைரஸ். இதை தடுப்பதற்காகவும் தற்காத்து கொள்வதற்காகவும் மக்களும் அரசும் கடுமையாக பாடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியா முழுவவதும் ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தில் ஒரு வித்தியாசமான திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணம் என்பது ஊர் கூடி விருந்து வைத்து மணமகன் மற்றும் மணமகளை பெரியோர்கள் வாழ்த்தும் நிகழ்ச்சியாகும். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக திருமணத்தை வீடியோ கால் மூலம் செய்து கொண்டார்கள் ஒரு தம்பதிகள்.
இஸ்லாமிய முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். மணமகன் தனது வீட்டில் இருந்து கொண்டு வீடியோ கால் செய்து மணமகளை பார்க்கிறார். மணமகள் அவரது பெற்றோர் வீட்டில் இருந்தபடியே வீடியோ கால் மூலம் தனது திருமணத்தில் பங்கேற்றார். அதன் பின் பெரியவர்கள் இரு தரப்பும் சம்மதம் கேட்டு திருமணத்தை முடித்து வைத்தனர். இதோ அந்த வீடியோ.