தளபதி விஜயின் ஜனநாயகன் பொங்கலுக்கு வெளிவராத காரணத்தினால் விஜயின் தெறி திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்யும் எண்ணத்தில் தயாரிப்பாளர் தாணு அவர்கள் வருகின்ற 23ம் தேதி உலகமெங்கும் தெறி படத்தை பெரிய அளவில் வெளியிட முடிவு செய்து இருந்தார். ஏற்கனவே அஜித்குமாரின் மாபெரும் வெற்றிப்படமான மங்காத்தா அதே நாளில் வெளிவருகிறது.
அதுமட்டும் அல்லாமல் மோகன் G அவர்களின் திரௌபதி 2 திரைப்படம் அன்று வெளியாக உள்ளது. தெறி திரைப்படத்தை திரையிட்டால் தியேட்டர் திரௌபதிக்கு குறைவாக கிடைக்கும் என்பதால் தெறி படத்தின் தயாரிப்பாளருக்கு திரௌபதி படத்தின் இயக்குனர் வேண்டுகோள் ஒன்றை இணையத்தில் வைத்தார் அதில் எங்களை போன்று வளர்ந்து வரும் இயக்குனர்களின் படைப்பிற்கு உதவுங்கள். திரௌபதி 2 படத்தை மெயின் ஸ்க்ரீனில் வெளியிட உதவுங்கள் என்று கோரிக்கை வைத்தார்.
இதனை பார்த்த தாணு அவர்கள் புதிய இயக்குனர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே V Creations நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு “தெறி” திரைப்படத்தின் வெளியீட்டின் முடிவு நாளை அறிவிக்கப்படும் என்று பதிவிட்டு உள்ளார்.
இதற்கு திரௌபதி இயக்குனர் விஜய் ரசிகர்களுக்கும் மற்றும் தெறி படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.
Draupathi 2 Trailer Here:










