கேரளா இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் என்று சொல்வார்கள். எங்கு போனாலும் பசுமையாக மற்றும் குளிர்ச்சியாக இருக்கக்கூடிய ஒரு இடம் என்றால் கேரளாவை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் கூறலாம். கேரளாவில் தென்மேற்கு பருவமழை பொழிவு கொடுத்து வருகிறது அதனால் அங்கு உள்ள நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதில் சமீபத்தில் மூணாறு அடுத்து உள்ள ராஜ மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு 80க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் ஐந்து நாட்களாக மீட்பு குழுவினர் மீட்பு பணியில் இறங்கி போராடி வருகின்றனர். இதுவரை 50 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன மீதம் உள்ள 30 பேர் உடலை தேடி வருகின்றனர். இறந்தவர்களின் உறவினர்கள் வெளியூரிலிருந்து ராஜமலை சம்பவ இடத்திற்கு வந்து தன் சொந்தங்களை தொலைத்து விட்டோமே என்று கண்ணீர்விட்டு அழுது வருகின்றனர்.
இந்நிலையில் தன்னை வளர்த்த எஜமான் எங்காவது இருக்க மாட்டாரா என்று ஒரு நாய் 5 நாட்களாக சுற்றி சுற்றி வருகிறது. எப்போதெல்லாம் மீட்புப்படையினர் சடலத்தை மீட்டு வெளியில் எடுக்கிறார்களோ அப்போதெல்லாம் ஓடிச்சென்று அந்த சடலம் யார் என்று முகத்தை பார்த்துவிட்டு திரும்ப செல்கிறது.
எப்படியாவது தன்னை வளர்த்த எஜமானின் முகத்தை காண மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் அந்த நாய் இரண்டு நாட்களாக சரியாக உண்ணாமல் தன்னை வளர்த்த அவர்களை தேடிக் கொண்டிருக்கிறது. இதனைப் பார்த்து அங்குள்ள மக்கள் மற்றும் மீட்பு படையினர்கள் பாசத்தில் மனிதனையே மிஞ்சிவிட்டது என்று மெய்சிலிர்த்து பிரமித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றுவரை அந்த நாய் மண்ணுக்குள் புதைந்த எஜமானை எப்படியாவது பார்த்துவிட முடியதா என்று தவித்து வருகிறது.