Monday, August 17, 2026
-- Advertisement--

திமுக, அதிமுக முடிவுகள் தவெகக்கு பலமாக மாறுகிறதா? அமைதியான அரசியல் ஆட்டத்தில் விஜய்!!!

தனிப்பெரும்பான்மை இல்லாத போதிலும், தனிப்பெரும் கட்சியாக தவெக உள்ளது. ஆனால் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடாத ஆளுநரின் முடிவினை திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாமே கண்டித்துள்ளன. ஆனால் விஜய் இதுபற்றி வாய் திறக்கவில்லை.. விஜய் மிகவும் அமைதியாகவே இருக்கிறார். இதற்கு கூட விஜய் வாய் திறக்க மறுக்கிறார்..

இவர் எப்படி மத்திய அரசை எதிர்ப்பார் என்று திமுக கூட்டணி கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. அதேநேரம் திமுக, அதிமுக இணைந்து கூட்டணி அமைக்க போவதாக வெளியான செய்திகள் தமிழகத்தை ஆடிப்போக வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுகவினர் செய்யும் ஒவ்வொரு செயலும் தவெகவிற்கு சாதகமாகவே முடியும் என்கிறார்கள்

தவெக ஆட்சியமைக்க எந்த இடையூறும் செய்ய மாட்டோம் என்று கூறினார். ஆனால் ஆட்டம் அதன்பின்னரே மாறியது. மாறி மாறி ஊடகங்களில் சத்தியம் செய்யாத குறையாக செய்திகள் வரத்தொடங்கின. ஒருகட்டத்தில் திமுக, அதிமுக தலைகள், நாங்கள் பங்காளிகள் தான்.. கூட்டணி வைத்தால் என்ன தவறு என்கிற ரீதியில் பேச தொடங்கினார்கள். இது தமிழகத்தையே ஆடிப்போக வைத்துள்ளது.

இப்படியான ஒரு முடிவினை திமுக, அதிமுக சேர்ந்து எடுத்தால், அது தவெகவிற்கு தான் சாதகமாக முடியும். அவர்கள் ஒருவேளை தவெகவிற்கு ஆதரவு தந்தால், முதல்முறையாக திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு அமையும். விசிக, இடதுசாரிகள் முடிவினை பொறுத்து அதிமுக, திமுக அடுத்த கட்ட முடிவினை எடுக்கும் என்கிறார்கள். என்ன முடிவு என்றால், இருவரும் சேர்ந்து ஆட்சியமைப்பதுதான்.

தவெக எதிர்பார்த்தது போலவே நடப்பதாகவே தெரிகிறது. தவெக மெஜாரிட்டியுடன்வந்து ஆட்சி சரியில்லை என்று அவரை அம்பலப்படுத்துவதற்கு பதில், அதிமுக திமுக ஒன்று சேருவது.. இருவருக்குமே அது சவக்குழியாகும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். கெஜ்ரிவால் பாணியில் அடுத்த 10 வருடம் விஜய்யை அசைக்க முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள். மக்கள் மத்தியில் விஜய்க்கு அனுதாப அலை அதிரிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles