Saturday, July 12, 2025
-- Advertisement--

ஆரஞ்சு கலர் ஷர்ட் கூலிங் கிளாஸ் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய விஜயகாந்த்..!!! இந்த மனுசனா இப்படி பார்த்து எவ்வளவு நாள் ஆச்சி ரசிகர்கள் வருத்தம்.

விஜயகாந்த் கேப்டன் என்று தமிழக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர். இவர் சினிமாவில் முதலில் நடித்த போது இவர் நடித்த படத்தில் தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்று சூட்டிங் ஸ்பாட்டில் விஜயகாந்த் அவர்கள் கண்முன்னே வேறொரு நடிகரை படத்தில் நடிக்க வைத்து அவமானப்படுத்தினார்கள் அதனை மனதில் வெறியாக எடுத்துக்கொண்டு விஜயகாந்த் எப்படியாவது சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று எண்ணி அடுத்தடுத்த படங்களை நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்.

சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து வந்தவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடு தேமுதிக என்ற கட்சியினை தொடங்கி அரசியலில் இறங்கினார். மக்களும் எளிதில் யாருக்கும் தராத வாய்ப்பை வாக்குகளை அள்ளிக் குவித்தனர் விஜயகாந்திற்கு.

தேர்தலில் பல இடங்களில் தோல்வியை சந்தித்தாலும் சில இடங்களில் வெற்றி பெற்று கம்பீரமாக இருந்தார் வெற்றி பெற்ற இடங்களுக்கெல்லாம் தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு இறங்கி உழைத்தார் மனிதர்.

அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்துக்கண்டு தேர்தலை எதிர்கொண்டு அதிக வாக்குகளைப் பெற்று பின் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்து அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களையே நேருக்கு நேராக கேள்வி கேட்டவர். சில வருடங்களில் கம்பீரமான மனிதனுக்கு உடல்நிலை சரியிலலாமல் போனது உடல்நிலை சரியில்லை என்றால் மனநிலையிலும் சில தடுமாற்றங்கள் இருக்கும் அப்போது விஜயகாந்த் அவர்கள் பேசிய பேச்சு மீடியாகளில் கலாய்த்து வந்தார்கள்.

விஜயகாந்த் அவர்களின் உடல்நிலையில் அதிக பாதிப்புகள் தெரிந்ததால் அவர்கள் குடும்பத்தினரை ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று விஜயகாந்த் அவர்களை ஓய்வு எடுக்க அறிவுறுத்தி வந்தார்கள். வெளிநாடுகள் சென்று சிகிச்சை எடுத்து வந்த விஜயகாந்த் தற்போது ஓரளவு நலமாக இருக்கிறார் இந்நிலையில் அடிக்கடி மருத்துவ பரிசோதனையும் செய்து கொண்டு வருகிறார்.

தற்பொழுது விஜயகாந்த் அவர்கள் தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். என்னை பார்த்த ரசிகர்கள் கேப்டனை பார்த்து எவ்வளவு நாளாச்சு எப்படி இருந்த மனுஷன் என்று கமெண்ட செய்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles