திவ்யா தர்ஷினி விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்றே சொல்லலாம். விஜய் டிவியில் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இவருடைய கலகலப்பான பேச்சு திறமை தான் நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களை கவர்ந்ததிற்கு காரணம்.
தமிழ்நாட்டில் ஒரு தொகுப்பாளர் மீது மக்கள் நிறைய அன்பு வைத்துள்ளார்கள் என்றால் அது திவ்யதர்ஷினி மீது தான். அந்த அளவுக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை தனது திறமையால் கவர்ந்தவர்.
சமீபத்தில் DD அவர்கள் சமூக ஊடகத்தில் ஒரு பதிவினை செய்து உள்ளார். அந்த பதிவில் தனது இடது காலில் fracture ஏற்பட்டு தன்னால் நடக்க முடியாமல் வலியால் தவித்து இருந்தேன் . அந்த நேரத்தில் தன் மீது அளவு கடந்த அன்பை காண்பித்த ரசிகர்களுக்கு நன்றி என்று கூறி இருந்தார். தனக்கு டிரீட்மென்ட் பார்த்த மருத்துவருக்கு நன்றி தெரிவித்து உள்ளார். இதோ அந்த புகைப்படம்.