தமிழ் சினிமாவின் மாபெரும் இயக்குனர்களில் ஒருவர் சங்கர். இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த இயக்குனர் என்றே கூறலாம்.
தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஒரே இயக்குனர் இவர்தான். அவருடைய படங்களுக்கு கோடிக்கணக்கில் பட்ஜெட் ஆனதால் அந்த பெயர் உருவானது. இவர் தமிழில் ஜென்டில்மேன், காதலன், இந்தியன், முதல்வன் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் எந்திரன்-2 இவரது இயக்கத்தில் வெளியான படம்.இவரது துணை இயக்குனர்கள் பலரும் பல படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளனர்.
இந்நிலையில் இவர் முதன்முதலில் தளபதி விஜயின் அப்பாவான எஸ். ஏ சந்திரசேகரன் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அப்போது எஸ் ஏ சந்திரசேகர் பல படங்களில் இவரை சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கவைத்துள்ளார். அது குறித்த புகைப்படங்கள் இதோ.






