கொரானோ தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இருப்பினும் கூட குணமடைந்தோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருப்பதாக இந்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. எனினும் பல நிகழ்ச்சிகள், பல பொழுதுபோக்கு கூடங்கள் மூடியுள்ளன.

வீட்டில் பொழுதைக் கழித்து வரும் பலருக்கு சினிமா பிரபலங்கள் தங்களது வீடியோ கால் மூலமாக உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல இளம் இயக்குனரான அனிருத் தினமும் தன் பாடல்களை வீட்டிலேயே இசை அமைத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்த வீடியோக்கள் மிகவும் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் இந்த வீடியோவை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த இசையை கேட்டு நான் கண் கலங்கி விட்டேன் என கூறியுள்ளார். விக்னேஷ் சிவன் நயன்தாராவின் காதலர் என்பதும் குறிப்பிடத்தக்கது, விக்னேஷ் சிவனும் அனிருத்தும் சேர்ந்து நானும் ரவுடிதான் படத்தில் பணி புரிந்தார்கள்.