தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் நடிகர் சேரன். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ஒரு காவியம் போலவே இருக்கும். எதார்த்த சினிமாவையே தன் ஊன்றுகோலாக வைத்து இவர் இயக்கும் படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.
இவர் இயக்கிய பொற்காலம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பாண்டவர் பூமி, பொக்கிஷம் போன்ற பல படங்கள் இவரது இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. சில காலமாக இயக்குவதை நிறுத்தி இருந்த இவர் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இவருக்கு இந்த சீசன் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே கூறலாம். அதன் பிறகு இவர் எப்போது படம் இயக்குவார் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. தற்போது இவர் விஜய்சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க கதை தேர்வு செய்துள்ளார்.
ஆனால் இந்த படம் இயக்க நாட்கள் தள்ளி கொண்டே போவதால், காலம் எப்போது வலி வகுக்குமோ என ஏக்கத்தோடு ட்விட் செய்துள்ளார்.