சமீபகாலமாக கொரானோ என்னும் கிருமி தொற்றால் பல உயிர்கள் இறந்து வருகின்றன. பல பிரபலங்களும் இந்நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். அண்மையில் பல சினிமா பிரபலங்களும் இறந்துவிட்டனர்.
இம் மரணங்கள் பெரும் அதிர்ச்சியை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடத்தில் பிரபல நடிகர்களான ரிஷி கபூர், இர்பான் கான், சுஷாந்த் சிங், சேதுராமன், சிரஞ்சீவி சர்ஜா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இறந்துள்ளனர்.
இந்நிலையில் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகவும் இருபத்தைந்து ஹிட் படங்களை கொடுத்தவர் பப்புகுட்டி பாகவதர். இவர் கடந்த திங்கள்கிழமை இறந்துவிட்டார். இவருக்கு வயது105, வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் இறந்துள்ளார். இவர் சினிமாவில் பாடகராகும் இருந்துள்ளார். இவரது மகன் மலையாளத்தில் நடன நடிகராக இருக்கும் மோகன்ராஜ், இவரின் மருமகன் கேஜி ஜார்ஜ் இயக்குனர்.
இவரது மறைவுக்கு கேரள முதல்வர் பிரணாய் விஜயன் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.











