பல காதல் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ள இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து இரண்டு பெரிய படங்களை கொடுத்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சூர்யா கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது. காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய இரண்டு படங்களும் இவர்கள் கூட்டணியில் இருந்து வெளிவந்த படம். இந்த இரண்டுமே சூர்யாவின் சினிமா வாழ்க்கை பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது.

அதன்பிறகு சூர்யாவுக்கும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் மேலாகியும் இன்னும் அந்த பிரச்சினை முடியவில்லை என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சூர்யா உடனான சண்டை பற்றி கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது விக்ரம் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் துருவநட்சத்திரம் படம் முதலில் சூர்யாவை வைத்து தான் இயக்க இருந்தது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு நான் சூர்யாவிடம் ஒரு படத்தின் பாதி கதையை எழுதி அவரிடம் கொடுத்தபோது அவர் முழு கதையையும் கேட்டார், என் மீது நம்பிக்கை வையுங்கள் ,உங்களுக்கு நிறைய ஹிட் படங்கள் கொடுத்து இருக்கிறேன்,என்று கூறினேன். சென்றேன் ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை, முழு படகதை தெரிந்தால் தான் நான் நடிப்பேன் என்று கூறினார்.
இதனால் இருவருக்குள்ளும் சிறிய பிரச்சினை ஏற்பட்டது, அதன் பிறகு இருவரும் இதுவரை இணையவில்லை. கமல் காதம்பரி என்ற கதாபாத்திரத்தில் ஒரு காதல் கதையை உருவாக்கி அதில் சூர்யாவை தான் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்றும் கௌதம் வாசுதேவ் மேனன் நினைத்திருந்தாராம். தற்போது இந்த கதைக்கு சூர்யா ஓகே சொல்லி உள்ளதாகவும் கூடிய விரைவில் இவர்கள் இருவரும் இணைவார்கள் என்றும் கூறுகின்றனர்.