சில வருடங்களுக்கு முன்பு அனைத்து காதலர்களையும் புரட்டிப் போட்ட படம் விண்ணைத்தாண்டி வருவாயா. தனக்கென்று ஒரு ஸ்டைலில் உடைய இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்.
இவருடைய சினிமாக்களில் காதல் மிகவும் சுவாரசியமாக இருக்கும். இவருடைய படங்கள் மிகவும் கனவுலகத்தில் உள்ளது போல் இருக்கும். அதிக ஆங்கிலம், கொஞ்சம் தமிழ், கொஞ்சம் வித்தியாசமான ஒரு கனவுலகத்தில் இவர் படம் எப்போதும் இருக்கும்.
இதுவரை இவர் மின்னலே, காக்க காக்க, பச்சைக்கிளி முத்துச்சரம், விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், அச்சம் என்பது மடமையடா மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் என முழுக்க முழுக்க காதல் சார்ந்த படங்களை இவர் எடுத்து உள்ளார், என்றே கூறலாம்.
இந்நிலையில் இவர் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் போல் ஒரு குறும்படம் தற்போது ரிலீசாகி உள்ளது. அதில் திரிஷா அதே போன்று இருந்தாலும் சிம்பு சற்று வயதான தோற்றத்தில் காணப்படுகிறார். என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இதை அடுத்து இவர் ஜிவி பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா நடிக்கும் புதுப் படத்துக்கு “செல்பி” என பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.