தற்போது உலகெங்கும் குரானா வைரஸ் தாக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் இந்த கிருமி தொற்று தீவிரம் அதிகமாகிக் கொண்டே வருவதால் மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
பல நாட்டுத் தலைவர்களும் எப்படி இதைக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் மிகவும் சிரமத்தில் உள்ளனர். இந் நிலையில் சினிமாவில் சேர்ந்த பலர் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்று என்னும் சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அண்மையில் இயக்குனர் திலீஷ் போத்தன் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றிருந்தார்.
அங்கு ஊரடங்கு காரணமாக நாடு திரும்பாமல் அங்கேயே தங்கியிருந்தார். அவருடன் சேர்ந்து படக்குழுவினரும் அங்கேயே இருந்தனர். இந்நிலையில் திலீஷ் போத்தன் ஜூன் 6ஆம் தேதி தாயகம் திரும்பினர்.
தற்போது இந்தப் படத்தை பிரபல சீரியல் ஆன உப்பு குழுமம் தொடரில் இயக்குனர் சீனு இயக்க திலீஷ் போத்தனும் பணியாற்றுகிறார். அனைவரும் நாடு திரும்பிய பின்பு கொரானோ பரிசோதனை செய்யப்பட்டதில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மூவருக்கு பரிசோதனை முடிவு இனி மேல்தான் வரும். இதில் திலீப்புக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிக்கையை அவர் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்