தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலாபால். மேலும் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஏ எல் விஜய். இவர் தல அஜித்தை வைத்து இயக்கிய கிரீடம் படம் மக்களிடையே மிகுந்த வெற்றியை பெற்றுத் தந்தது. இவருக்கு கிரீடம் படம்தான் முதல் படமாக இருப்பினும் முதல் படத்திலேயே வெற்றிப்பட இயக்குனர் என்ற பெயரை இவர் வாங்கினார்
கிரீடம் படத்தை தொடர்ந்து மிகவும் வித்தியாசமான கதைகளை மையமாகக் கொண்டு இவர் சில தமிழ் படங்களை இயக்கினார். மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், சைவம் போன்ற படங்கள் இவருக்கு சிறந்த இயக்குனருக்கான விருதுகளையும் பெற்றுத்தந்தது. தளபதி விஜய் நடித்த தலைவா படத்தையும் இவர்தான் இயக்கினார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை அமலாபால் மீது இவருக்கு காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்தனர். இருவரும் பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தில் முடிந்தது.
அதன் பிறகு அமலாபால் படங்களில் நடித்து பிசியாக உள்ளார்.சமீபத்தில் மும்பை பாப் பாடகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.விஜய் கடந்த ஆண்டு ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஐஸ்வர்யாவுக்கும் விஜய்க்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ஏ எல் விஜய் சகோதரர் தனது இணையப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.