அறிமுகப் படத்திலேயே வெற்றி இயக்குனர் என்ற பெயரை வாங்கியவர் ஏ.எல். விஜய். அஜித்தை வைத்து இயக்கிய கிரீடம் தான் இவருக்கு முதல் படம், முதல் படத்திலேயே வெற்றி இயக்குனர் என்று பெயர் வாங்கியவர்.
அடுத்தடுத்து பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு இவர் தந்தார். தெய்வத்திருமகள் ,மதராஸபட்டினம் சைவம், தலைவா போன்ற படங்களை இவர் இயக்கியுள்ளார், இதில் மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் ஆகிய படங்களுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்தது. இந்நிலையில் தற்போது தலைவி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுமுதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் படம் ஆகும்.
இந்நிலையில் இவர் விஜயுடன் தலைவா படத்தில் பணிபுரியும் பொழுது விஜய்க்கு ஜோடியாக நடித்த அமலா பால் காதலித்தார். இருவரும் பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு ஒரு சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் ஐஸ்வர்யா என்ற பெண் மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகின்றது. இது அந்த புகைப்படம்