Tuesday, November 10, 2026
-- Advertisement--

அடுத்த போட்டியில் தோனி விளையாட மாட்டார்..

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது. இதன் காரணமாக 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக பல்வேறு இளம் வீரர்களை விலைக்கு வாங்கியிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இம்முறை நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரில் தங்களது வலுவான கம்பேக்கை வழங்கும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடி முடித்துள்ள சென்னை அணியானது மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து மீண்டும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. சென்னை அணியில் நட்சத்திர வீரர்களான மகேந்திர சிங் தோனி, பிரேவிஸ் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் காயம் காரணமாக விளையாடாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி : அவரது காயத்தில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று என்பதனால் அவர் சிஎஸ்கே அணியுடன் பயணிக்காமல் இருந்து வருகிறார். இதன் காரணமாக நிச்சயம் மேலும் ஒரு வாரம் அவர் அணியில் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய சி.எஸ்.கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில் : தோனி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அதற்கு சில காலம் ஆகும். எவ்வளவு நாட்கள் என கூற முடியாது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles