Tuesday, August 18, 2026
-- Advertisement--

நீட் சர்ச்சை உச்சம்… மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடி முடிவு!

நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக எழுந்த தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் ரீதியாகவும் மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்தது.

கல்வித்துறையின் பொறுப்பில் இருந்த தர்மேந்திர பிரதான் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தன. குறிப்பாக போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மை, தேர்வு நிர்வாகத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

மாணவர் அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் தரப்பில் இருந்து நீட் விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை மற்றும் கடுமையான நடவடிக்கைகள் கோரி போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், இந்த ராஜிநாமா அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தர்மேந்திர பிரதானின் விலகலுக்குப் பிறகு, மத்திய கல்வித்துறைக்கு புதிய அமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதே நேரத்தில், நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளில் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles