தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு முத்திரையை பதித்து வெற்றி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார்.
வழக்கம் போல கமர்சியல் படங்கள் மட்டுமே நடிக்காமல் கதை அழுத்தம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து நல்ல வசூல் செய்தது.

அந்தப் படத்திற்குப் பிறகு பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் தான் வாத்தி தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி கிட்ட திட்ட தெலுங்கு படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டது போல இருந்தது.

தெலுங்கு மார்க்கெட்டை பிடிப்பதற்கு தெலுங்கு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை வைத்து படம் செய்தால் எளிதில் மார்க்கெட்டை பிடித்து விடலாம் என்று சிவகார்த்திகேயன் விஜய் வரிசையில் தனுஷும் இணைந்து விட்டார் போல.

தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் வெளியான பிரின்ஸ் படம் மாபெரும் தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து வெளியான இயக்குனர் வம்சியின் வாரிசு கலவையான விமர்சனங்களை சந்தித்தது இருந்தாலும் விஜய் படம் என்பதால் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.
வாரிசு படத்தை தொடர்ந்து தற்பொழுது வெளியாகி உள்ள வாத்தி கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தது. சிலர் படம் ஓகே பார்க்கலாம் என்றார்கள். பலர் படம் நன்றாகவே இல்லை என்றார்கள். தற்பொழுது தனுஷின் வாத்தி திரைப்படத்தின் வசூல் விபரங்கள் வெளிவந்துள்ளது.

வாத்தி திரைப்படம் வெளியிட்ட 8 நாட்களிலேயே 75 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளது.

கதையில் தொய்வு இருந்தாலும் இதை வைத்துப் பார்க்கையில் வியாபாரம் ரீதியாக வாத்தி ஜெயித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
வாத்தி தனுஷுக்கு வெற்றி படம் மக்களுக்கு ?