இரண்டு வருடங்களுக்குப் பிறகு தனுஷ் நடித்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது. தனுஷ் நடித்த முந்தைய படமான மாறன் ஜகமே தந்திரம் OTT தளத்தில் வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்தது. இரண்டு வருடத்திற்கு பின் நேற்று திரையரங்குகளில் தனுஷின் திருச்சிற்றம்பலம் வெளியானது. திருச்சிற்றம்பலம் தனுஷுக்கு வெற்றிப்படமாக அமைந்ததா என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.
DOINK என்ற FOOD DELIVERY நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்க்கிறார் தனுஷ். போலீசாக இருக்கும் தனது அப்பாவிடம் பத்து வருடங்கள் பேசாமலே ஒரே வீட்டில் இருக்கிறார். ஜாலியான தாத்தா பாரதிராஜா பள்ளி கால நெருங்கிய தோழி நித்யா மேனன் அவர்களுடன் தனது வாழ்க்கையை சந்தோசமாக நகர்த்தி கொண்டு இருக்கும் தனுஷ் ராசி கண்ணாவை காதலிக்கிறார். ஆனால் ராசி கண்ணா தனுஷின் காதலை நிராகரிக்கிறார் காதல் தோல்வியில் நொந்து போன தனுஷ் தனது அம்மாவின் சொந்த கிராமத்திற்கு தனது அப்பா தாத்தா மற்றும் நெருங்கிய தோழி நித்யாமேனன் உடன் செல்கிறார். அங்கு பிரியா பவானி சங்கரை சந்திக்கிறார் பிரியா மீது ஒரு தலையாக காதல் வயப்படுகிறார் தனுஷ். தனுஷ் இரண்டாவது காதலும் தோல்வியில் முடிய தனது தாத்தாவிடம் புலம்பும் தனுசுக்கு அவரது தாத்தா பாரதிராஜா அவர்கள் ஐடியா ஒன்றை கொடுக்கிறார். எங்கெங்கேயோ தனக்கு வாழ்க்கை துணையை தேடுற உன் பக்கத்திலேயே வச்சுக்கிட்டு என்று தனுஷின் தோழியான நித்யா மேனனை காட்டுகிறார் பாரதிராஜா.
தனுஷ் தன்னை அறியாமலேயே தனது நெருங்கிய தோழியான நித்யா மேனனை காதலிக்க தொடங்குகிறார் அந்த காதலை நித்யா மேனனிடம் கூறுகிறார். நித்யா மேனன் தனுஷின் காதலை ஏற்றுக்கொண்டாரா அதன் பின் என்ன நடந்தது என்பது தான் சுவாரஸ்யமான திரைக்கதை.
நீண்ட நாட்களாக கத்தி அருவாள் துப்பாக்கி சண்டை என்று தொடர்ந்து பார்த்து வந்த படங்கள் மத்தியில் திருச்சிற்றம்பலம் நல்ல படத்தை பார்த்த திருப்தியை தருகிறது
தனுஷ் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் தனது நடிப்பை அசால்ட்டாக வெளிப்படுத்துகிறார் மனிதர் குறிப்பாக இந்த படத்தின் திருச்சிற்றம்பலம் கதாபாத்திரம் தனுஷுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரியான கதாபாத்திரம். ஈஸியாக ஸ்கோர் செய்கிறார்.
நித்யா மேனன் இந்த படத்திற்கு பெரிய பலம். ஷோபனா என்ற கதாபாத்திரத்தில் தனுஷுக்கு தோழியாக நடித்து உள்ளார். இப்படி ஒரு தோழி கிடைக்கமாட்டாங்களா என்று எங்கும் அளவிற்கு இருந்தது நித்யா மேனன் நடிப்பு.
பிரியா பவானி ஷங்கர் மற்றும் ராசி கண்ணா சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் அவர்களது வேலையை கச்சிதமாக செய்து உள்ளனர்.
இயக்குனர் ஜவஹர் மித்ரன் யாரடி நீ மோகினி என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த இவர் மேலும் ஒரு தரமான படத்தை நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் கொடுத்து உள்ளார்.
பிரகாஷ் ராஜ் வழக்கம் போல தனது நடிப்பால் நெகிழ செய்கிறார்.
பாரதிராஜா சார் தனுஷின் தாதாவாக நடித்து இருக்கும் அவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்களை ரசிக்கவைத்தது மட்டும் அல்லாமல் நம்ம வீட்டில் உள்ள தாத்தாவையும் நினைவுபடுத்தியது.
படத்திற்கு பெரிய தூணே அனிருத் தான். அவரது இசையை தொடர்ந்து வரும் காட்சிகள் கவிதை. அதனை பாடல்களும் ரசிக்கும் விதம்.
பிளஸ்:
தனுஷ் நித்யா மேனன் நடிப்பு
அனிருத் இசை மற்றும் பின்னணி இசை
ஜவஹர் மித்ரன் இயக்கம்
பாரதி ராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பு
மைனஸ்
குறை சொல்லும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.
மொத்தத்தில் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று ஒரு நல்ல படத்தை பார்த்து வந்த அனுபவத்தை தரும் இந்த திருச்சிற்றம்பலம்.
Rating : 4/5
Verdict : BLOCKBUSTER