நடிகர் தனுஷ் அவருடைய புது திரைப்படமான குபேராவுக்காக மும்பையில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் 12 மணி நேரத்துக்கு மேல இருந்திருக்காரு. இந்த படத்தோட இயக்குனரான சேகர் கமுலா கதாநாயகனோட துயரத்தை அவர் படும் கஷ்டத்தை உணர்திற ஒரு முக்கியமான காட்சியை இயற்கையாகவே படம் பிடிக்கணும் அப்படின்றதுக்காக குப்பைத் தொட்டியில் நேரடியாக படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதில் தனுஷ் மற்றும் அப்படத்தின் இயக்குனர் இருவரும் முகக் கவசம் கூட அணியாமல் அதிக நேரமாக குப்பைகள் நிறைந்த அந்த சூழலில் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த படத்தோட காட்சிகளை எடுத்துள்ளனர். தனுஷின் நடிப்பை மற்றும் நடிப்பு திறமையை மேலும் உயர்த்தும் வகையில் இப்படம் அமைந்து இருக்கு. இந்த படத்தில் தனுஷ் ஒரு சாதாரண மனிதராக நடித்துள்ளார் மேலும் இந்த படம் பான் இந்தியா படமாகவும் உருவாகி வருகின்றது.
இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் ரஷ்மிகா மந்தனா மெயினான கதாபத்திரமா நடிச்சிருக்காங்க. இந்த படத்தை காணும் போது அவருடைய ரசிகர்கள் அவரின் புதிய அவதாரத்தை காணும் ஒரு நல்ல வாய்ப்பை பெறுவார்கள் என்று படக்குழுவால் நம்பப்படுகிறது.