உலகில் உள்ள அனைத்து மக்களும் தற்போது கொரானோ வைரஸ் பரவாமல் இருக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வைரஸ் தாக்கம் முதலில் ஏற்படும் போது எப்படி, எவ்வாறு பரவுகிறது என்ற விழிப்புணர்வை பெறவே பல நாட்கள் ஆகிவிட்டது.
முதலில் சீன நாட்டில் ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது உலெங்கும் உள்ள நாடுகளுக்கு வெகுவாக பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் 300 பேருக்கு மேல் கொரனோ வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மார்ச் 22 அன்று கொரனோ வைரஸ் பரவாமல் தடுக்க பிரதமர் ஊரடங்கு உத்தரவு தந்துள்ளார்.
மேலும் அன்று மாலை நமக்காக உழைக்கும் மருத்துவர்களுக்காக மாலை அனைவரும் வீட்டுவாசலில் கை தட்டவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் இது குறித்து பிரபல தமிழ் நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ” இளைஞர் தங்களை கொரனோ வைரஸ் தாக்காது என்று எண்ணி தேவையில்லாமல் ஊர் சுற்றி வருகின்றனர். இந்நிலையில் கொரனோ வைரஸ் தாக்கி அதிகமாக இறக்கவில்லை என்றாலும், நீங்கள் அந்த நோயை பரப்பும் கருவியாக மாறிவிடாதீர்கள், பொது இடங்களில் தேவை இல்லாமல் நடமாடுவதை தவிர்த்திடுங்கள், தங்களின்உயிரை பணயம் வைத்து, கொரனோ வைரஸ் எதிர்த்து போராடும் மருத்துவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்” என கூறியுள்ளார்.