விஜயகாந்த் சினிமாவில் நடிக்கவந்த நேரம் தமிழ் உச்சரிப்பு சரி இல்லை என்று காரணம் சொல்லி அவரது கண் முன்னே அதே படத்தில் வேறொரு நடிகரை ஹீரோவாக நடிக்க வைத்து அவமானம் செய்தார்களாம் . பல அவமானங்களை சந்தித்த அவர் தமிழ் சினிமாவில் எப்படியாவது ஹீரோவாக வேண்டும் என்று கடினமாக உழைத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மக்கள் மனதில் பிடித்தவர்.
அதே போல அரசியலில் இவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு வேற லெவல். தேமுதிக என்ற கட்சி தொடங்கி மக்கள் செல்வாக்கு பெற்று எதிர்க்கட்சி தலைவராக இருந்து சிங்கம் போல வளர்ந்து வந்த விஜயகாந்த் நேரமோ என்னமோ உடல்நிலை பிரச்சனைகளால் அவதிப்பட்டு உயிர் இழந்தார்.
விஜயகாந்த் தனது தாய் தந்தை பெயரில் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி என்ற கல்லூரி தொடங்கி ஏழை மக்கள், கட்சி தொண்டர்கள் , நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமான மாணவர்களுக்கு படிக்கச் உதவி செய்தும் வந்தார். 75 ஏக்கர் அமைந்த இந்த கல்லூரி அண்ணா பல்கலைக்கழகம் விதியின் படி கல்லூரியும் சிறப்பாக நடைபெற்று வந்தது.
கேப்டன் இறந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அந்த கல்லூரியை கேப்டன் மனைவி பிரேமலதா மற்றும் அவரது சகோதரர் LK சுதீஷ் நிர்வாகம் செய்து வந்தனர்.
பிரேமலதா தேமுதிக கட்சியை பலப்படுத்த தனது மகன் விஜய் பிரபாகரனை அரசியல் களத்தில் இறக்கிவிட்டு உள்ளார்.
இந்நிலையில் விஜயகாந்த் அவர்களின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை தற்பொழுது நிர்வாகம் செய்வதில் பல சிக்கல்கள் இருப்பதால் அந்த கல்லூரியை பிரபல கல்வி குழுமமான ஸ்ரீ தனலட்சுமி ஸ்ரீனிவாசன் கல்வி நிர்வாகத்திடம் 150 கோடிக்கு விற்பனை செய்து உள்ளதாக தகவல்.
தற்பொழுது அந்த கல்லூரியை தனலட்சுமி ஸ்ரீனிவாசன் குழுமம் நடத்தி வருவதாக தகவல்.