தற்போது கொரானோ ஊரடங்கு இந்தியாவில் அமலுக்கு வந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் அதனால் பல நஷ்டங்களை மக்களுக்கு ஏற்பட்டுள்ளன. சினிமா துறை சார்ந்தவர்களுக்கும் சின்னத் திரைத் துறை சார்ந்தவர்களுக்கும் பல கஷ்டங்கள் வந்துள்ளன.
ஹிந்தி சீரியல் நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் தீபிகா சிங். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மொழிபெயர்ப்பு சீரியல் ஆனா என் கணவன் என் தோழன் சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளார்.
இந்நிலையில் இவரின் தாயாருக்கு சமீபத்தில் கொரானோ வைரஸ் அறிகுறி இருந்ததால் மருத்துவ பரிசோதனைக்கு சேர்த்துள்ளார். சோதனை முடிவில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் ஆனால் மருத்துவமனை பரிசோதனை முடிவுகள் தர மறுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் குடும்பத்திற்கு மொத்தம் 42 பேர் எனவும் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கும் பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கண்ணீருடன் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்தார், மேலும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.