தெய்வத்திருமகள் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த குழந்தை நட்சத்திரம் என்றால் அது சாரா அர்ஜுன் தான்.
AL விஜய் இயக்குனர் இயக்கத்தில் வெளியான தெய்வ திருமகள் படத்தில், நிலா என்ற கதாபாத்திரத்தில், விக்ரம் அவர்களின் மகளாக நடித்திருந்தார் சாரா. குறிப்பாக, கோர்ட் சீனில் தந்தையை பார்த்து சாரா வெளிப்படுத்தும் செய்கைகள், சினிமா ரசிகர்களின் கண்களை கலங்கச் செய்தது. குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே நடிப்பில் அசத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரத்தின் இளம் வயது வடிவில் தோன்றிய சாரா, மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதேபோல், பாலிவுட்டில் Dhurandhar திரைப்படத்தில், ரன்வீர் சிங் உடன் நடித்ததன் மூலம், இந்திய அளவில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
சினிமாவில் முழுநேர கதாநாயகியாக வலம் வர வேண்டும் என்ற கனவுடன், தற்போது Euphoria என்ற தெலுங்கு திரைப்படத்தில், முதன்முறையாக ஹீரோயினாக நடித்து வருகிறார் சாரா அர்ஜுன்.
சமீபத்தில், அந்த திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில், சேலை அணிந்து பங்கேற்றிருந்த சாராவின் தோற்றம், பார்ப்பவர்களை அசரவைக்கும் வகையில் இருந்தது. குழந்தை நட்சத்திரமாக பார்த்த ரசிகர்கள்,“அந்த பொண்ணா இவங்க? இவளோ அழகா இருக்காங்களே!” என்று சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.




குழந்தை நட்சத்திரத்திலிருந்து கதாநாயகி வரை, தனது வளர்ச்சியை அழகாகவும், திறமையாகவும் நிரூபித்து வரும் சாரா அர்ஜுன், இனி தென்னிந்திய சினிமாவின் கவனிக்க வேண்டிய இளம் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார்.










