விஜய் டிவி ஆரம்பித்த காலத்திலிருந்தே தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் மிக நன்றாக இருக்கும். இவர் தொகுத்து வழங்கும் விதம் யார் மனதையும் புண்படுத்தாமல் இருப்பதால் இவருக்கு நிறைய ரசிகர்கள் உண்டு.
டிடி விஜய் தொலைக்காட்சியில் இருப்பது வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் ரசிகர்கள் உண்டு.
இவர் நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார். தற்போது புற்று நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு கமல்ஹாசன் கட்டிப்பிடி வைத்தியத்தை செய்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.