விஜய் தொலைக்காட்சியில் பள்ளிப்பருவத்தில் இருந்தே பணிபுரிபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இவர் பள்ளிப் பருவத்திலிருந்தே பணிபுரிவதால் இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
காபி வித் டிடி, அன்புடன் டிடி, ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் கேர்ள்ஸ், எங்கிட்ட மோதாதே, போன்ற பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி உள்ளார். பல சினிமா பிரபலங்களையும் இவர் நேர்காணல் செய்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் பொழுதை கழித்து வரும் டிடி தற்போது சமீபத்தில் தனது கால் முறிந்தது கட்டுப்போட்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கால் முறிந்த நிலையிலும் உட்கார்ந்தபடியே ஏ ஆர் ரகுமான் பாட்டுக்கு நடனம் நடனம் ஆடி இஸ்லாமிய மக்களுக்கு தனது ரம்ஜான் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.