தசரா படக் குழுவை சேர்ந்தவர்களுக்கு 130 தங்க நாணயங்கள் வழங்கி கீர்த்தி சுரேஷ் அசத்தியிருக்கிறார் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாக்கியுள்ள படம் தசரா.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய முறையில் வரும் 30ஆம் தேதி வெளியாகும். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். சமுத்திரகனி, ஷைண்டாம் சாக்கோ, தீஷித் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் வெளியான படத்தின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் இறுதி நாளன்று ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் பட குழுவினரை சேர்ந்த 130 பேருக்கு தலா 10 கிராம் தங்க நாணயங்களை வழங்கியுள்ளார்.
ரூபாய் 70 லட்சம் முதல் 75 லட்சம் வரை செலவு செய்து தங்க நாணயங்களை கீர்த்தி சுரேஷ் வழங்கி இருப்பது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. இதற்கு முன் மகேஷ்பாபு படத்தில் நடித்த போதும் படக்குழுவை சேர்ந்தவர்களுக்கு தங்க நாணயங்களை கீர்த்தி பரிசளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் முன்னதாக தசரா பட ப்ரோமோஷன் பணிகளின் போது நடிகை கீர்த்தி சுரேஷ் கைகளைப் பயன்படுத்தாமல் பாட்டிலில் இருந்த குளிர்பானத்தைக் குடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.