Thursday, April 25, 2024
-- Advertisement--

சைக்கிள் ஓட்டுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இவ்வள்வு இருக்கிறதா..!!!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். நாம் உடலை பற்றி அக்கறைகொள்ளாமல் பணத்தையும், வேலையையும் நோக்கி ஓடிக்கொண்டு இருக்கின்றோம். இந்த நேரத்தில் தினமும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சில சின்ன சின்ன உடற்பயிற்சியை செய்து வந்தால் அது நமது உடலுக்கு மட்டும் அல்ல உள்ளத்திற்கும் நல்லது. அந்த வகையில் சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு மிகவும் நல்லது. நாம் தாத்தா, அப்பா வயதானாலும் அவர்களியிடம் ஒரு ஊன்று சக்தி இருக்கும் காரணம் அவர்கள் சைக்கிள் ஓடியதால் தான்.

சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகள்

உடல் எடை குறையும்

சைக்கிள் ஓட்டுவதால் உடலில் உள்ள கொழுப்புகள் குறைந்து உங்களது உடல் எடை கூடாமல் வைத்து கொள்ளலாம். உங்கள் உடலில் கலோரிஸ் எரிக்கப்படுவதால் உங்கள் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். உங்களது எடை குறைய வேண்டும் என்று நினைத்தால் தினமும் 5 – 10 கிலோமீட்டராவது சைக்கிள் ஓட்டுங்கள்.

மூளை செயல்பட்டு திறனை அதிகரிக்கும்

தினமும் சைக்கிள் ஓட்டுவதால் மனஅழுத்தம் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். நாம் இது போல உடல்பயிற்சி செய்யும் போது நமது உடலில் இருந்து “endrophins” வெளிப்படுகிறது. இது நமது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரிப்பட இயங்க வைக்கிறது.

ரத்த அழுத்தத்தை குறைக்கும்

சைக்கிள் ஓட்டினால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஒரு சராசரி மனிதனின் ரத்த அழுத்தம் SYSTOLIC 120 மற்றும் DIASTOLIC 80
அதுவே வயதில் முதிவர்கள் என்றால் இந்த அளவு சற்று அதிகமாக இருக்கும்.

சக்கரை நோய் கட்டுக்குள் வரும்

சைக்கிள் ஓட்டும் போது இன்சுலின் அதிகரித்து சக்கரை நோயை கட்டுக்குள் வைத்து இருக்கும். உடலில் உள்ள எல்லா பகுதிகளுக்கும் ரத்த ஓட்டம் பாயும். குறிப்பாக கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகாரிக்கும்.

கால்களில் ஊன்று திறன் அதிகரிக்கும்

பொதுவாக வயதாக வயதாக நரம்பின் செயல்பாடுகள் தவறினாலோ, அல்லது எலும்பின் வலிமை குறைந்தாலோ கால்கள் ஊன்றி நிற்க முடியாது. ஆனால் சைக்கிள் ஓட்டினால் நரம்பு மற்றும் தசைகளுக்கு நல்ல உடற்பயிற்சி கிடைப்பதால் ஊன்று திறன் அதிகரிக்கும்.

இருதயத்திற்கு நல்லது

தினமும் சைக்கிள் ஓட்டும் போது இதயத்திற்கு நல்லது. சைக்கிள் ஓட்டும் போது இதயத்திற்கும், நுரையீரலுக்கும் ரத்தஓட்டம் இருக்கும். அது மட்டும் அல்லாமல் இருதய தசைகளுக்கு மிக நல்லது. ஸ்ட்ரோக் வரமல் தவிர்க்கலாம். ரத்தத்தில் உள்ள கொழுப்பு குறையும்.

மேல் குறிப்பிட்ட அனைத்தும் சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் பலன்கள். ஏதாவது உடல்நல குறைவு இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து விட்டு இதனை தொடரலாம். உனகளுக்கு பனுள்ளதாக இருந்தால் இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles