Tuesday, September 8, 2026
-- Advertisement--

டெல்லி  அணியை  சிஎஸ்கே வென்றால் பிளேஆஃபுக்கு செல்ல முடியுமா?

2026 ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள அணிகள் 12 புள்ளிகளுக்கு மேல் பெற்று பிளே ஆப் ரேசில் முன்னிலையில் இருக்க, மீதமுள்ள ஒரு இடத்திற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை நடைபெறுகிறது.

புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அதேசமயம் டெல்லி கேபிடல்ஸ் அணியும் 9 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.

சிஎஸ்கே அணி இன்றைய போட்டியில் டெல்லியை வீழ்த்தினால், 10 போட்டிகளில் 10 புள்ளிகளைப் பெறும். இருப்பினும் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திலேயே நீடிக்கும். ஒருவேளை இன்று டெல்லி அணியிடம் சிஎஸ்கே தோற்க நேரிட்டால், அது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.

டெல்லி அணி 10 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு முன்னேறும், சிஎஸ்கே அணி 7-வது இடத்திற்குத் தள்ளப்படும். தோற்றால் சிஎஸ்கே அணிக்கு மீதமுள்ள 4 போட்டிகளுமே ‘இறுதிப் போட்டி’ போல மாறிவிடும்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles