இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு என தனி ரசிகர் கூட்டமேஉள்ளது. பல விளையாட்டுகள் இந்தியாவில் இருப்பினும் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் எண்ணிக்கை குறைவது இல்லை. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தாமாகவே கிரிக்கெட் உலகில் முன் வந்தவர் வீரர் ஹார்திக் பாண்டியா.

இவர் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் முக்கிய ஆல்-ரவுண்டராக திகழ்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இவர் மும்பை நகர் சார்பாக விளையாடுகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் செர்பியாவை சேர்ந்த நடாஷா என்ற நடிகையை காதலித்து வந்துள்ளார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடை பெற்றதாகவும் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் இருவரும் இணைந்து வெளியில் செல்லும் பல புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்தன. சமீபத்தில் இவர் தனது இணையப்பக்கத்தில் நடாஷாவுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நாங்கள் எங்கள் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க உள்ளோம், எங்கள் வாழ்க்கையில் இன்னொருவர் வர உள்ளார் என்று பதிவிட்டுள்ளார், இதைப்பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான என்று கேள்வி கேட்டு வருகின்றனர்,