கொரானோ ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே பொழுதை கழித்து வருகின்றனர். பொதுக்கூட்டங்கள் கூடும் இடமான கோயில், சினிமா தியேட்டர் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவை மூடப்பட்டுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்.
தற்போது எந்த போட்டியும் நடைபெறாமல் இருப்பதால் அவர் வீட்டிலேயே தன் குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளியிடும் டிக் டாக் வீடியோக்கள் மிகவும் வைரலாகி வருகின்றன. தமிழ் படங்களில் உள்ள பாடல்களை இவர் டிக் டாக் செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு டிக் டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பிரபுதேவா நடனம் ஆடிய “முக்காலா முக்காபுலா” என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
மேலும் அந்த டிக் டாக் வீடியோவை வெளியிட்டு அதில் யார் பெஸ்ட் டான்ஸர் என்று கமென்ட் செய்யுங்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் என்ன தலைவா நடனப் புயலுக்கு சவாலா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.