Thursday, September 10, 2026
-- Advertisement--

தமிழ்நாட்டில் மது கடைகள் மூடல் நடவடிக்கை.. வெளியான லேட்டஸ்ட் கணக்கு!

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக இதுவரை 513 மதுக்கடைகள் கண்டறியப்பட்டு மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள கடைகளையும் இந்த வார இறுதிக்குள் மூடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், நிர்வாக ரீதியாகப் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

முதலமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் மாநிலம் தழுவிய அளவில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், நேற்று வரை முதற்கட்டமாக 513 மதுக்கடைகள் அதிரடியாக மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளன. பணியாளர்கள் தரப்பில் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தாலும், மக்கள் நலனை முன்னிறுத்திப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்பதால், எஞ்சிய 204 கடைகளையும் மூடும் பணியில் அதிகாரிகள் சமரசமின்றி ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles