உலகெங்கும் பரவி வரும் கொரானா அதன் தாக்கத்தை இந்தியாவிலும் ஏற்படுத்தி வருகிறது. கொரானா நோயாளிகளை தனிமைப்படுத்துவது மக்களுடன் சற்று இடைவெளியில் கடைபிடிப்பதும் மிக முக்கியமானவைகள் ஒன்று. நிலையில் திருப்பதியில் உள்ள உள்ள காந்தி அரசு மருத்துவமனைக்கு கொரானாவிற்கு உரிய அறிகுறிகள் உள்ள ஒருவர் சிகிச்சை பெறுவதற்காக வந்த 65 வயது முதியவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து வெளியே அனுப்பி உள்ள காட்சி மிகவும் தீயாய் பரவி வருகின்றது. இந்த முதியவர் பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துக் கொண்டு வர சொல்லி வெளிய அனுப்பி உள்ளனர். அவருக்கு ஆம்புலன்ஸ் எதுவும் இல்லாமல் வெறும் ஸ்ட்ரெச்சரில் அனுப்பியுள்ளனர்.
இதனால் ஸ்ட்ரெச்சரில் அந்த நோயாளியைப் படுக்கவைத்து கொண்டு அவரது உறவினர்களும் எக்ஸ்ரே மையத்தை தேடி சாலையில் அலைந்து திரிந்து உள்ளனர். சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் இவர்கள் நோயாளியை ஸ்ட்ரெச்சரில் வைத்துக்கொண்டு சாலையில் நடந்து சென்ற போது இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் அதை படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொற்று அறிகுறியுடன் உள்ள ஒரு நபரை எப்படி அலைக்கழிப்பது சரியா என கூறி மக்கள் தங்கள் கண்டனத்தை இணையத்தின் வழியாக தெரிவித்து வருகின்றனர்.