மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள இந்தியா புல்ஸ் எனப்படும் தனிமைப்படுத்தப்படும் முகாமில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட 40 வயது பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிப்படைந்த இந்தப் பெண்ணின் அறைக்கு சென்ற சுபம் என்ற ஒருவர் தன்னை மருத்துவராக காட்டிக் கொண்டு அந்த பெண்ணிற்கு மசாஜ் செய்ய செய்துள்ளார்.
இந்த சம்பவமானது சுபம் என்பவரின் சகோதரர் அதே இந்தியா புல்ஸ் கட்டிடத்தில் ஐந்தாவது மாடியில் சிகிச்சை பெற்று உள்ளார். அவரை பார்ப்பதற்காக வந்த சுபம் தவறுதலாக இரண்டாவது மாடியிலிருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அறை கதவை தட்டியுள்ளார்.
உள்ளே அந்தப் பெண் இருப்பதை கண்டு நான் தவறாக வந்துவிட்டேன் என்று சமாளித்துள்ளார். மறுநாள் அதே போல அந்த பெண்ணின் அறைக்கதவை தட்டி தன்னை மருத்துவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார் . உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்று சுபம் வந்த பெண்ணிடம் கேட்க, அந்த பெண் உடல் வலி மட்டும் உள்ளது என்று கூறியுள்ளார். இதனால் மசாஜ் செய்தால் சரியாகிவிடும் என்று தவறான முறையில் அவரை வன்கொடுமை செய்து விட்டு அங்கிருந்து கிளம்பி உள்ளார். தனக்கு நடந்த இந்த வன்கொடுமையை எதிர்த்து அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
covid-19 முடிவுகள் அந்த சுபம் என்பவருக்கு காத்திருப்பதால் இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. அவரின் அறிக்கை வெளிவந்ததும் அவர் கைது செய்யப்படுவார் இல்லை எனில் அவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டால் கிருமித்தொற்று சரியான பிறகு அவர் கைது செய்யப்படுவார். இவர் மீது 376 மற்றும் 354 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.