உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது கொரானா. இந்நிலையில் இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரானா தாக்கம் அதிகமாகவே உள்ளது. தற்பொழுது கொரானாவிற்கு தடுப்பு மருந்துகளும் வேகமாக கண்டுபிடித்து வருகின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.
இருப்பினும் கொரானா வைரஸ் காரணமாக வட மாநிலங்களில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று திருமணம் செய்ய இருந்த மணமகளுக்கு திடீரென கொரானா வைரஸ் பாதிப்பு இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் கவச உடை அணிந்து திருமணம் செய்துகொண்டனர். இந்த புகைப்படம் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு பிறகு அந்தப் பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் திருமணத்தை தள்ளி போட வேண்டாம் என்று முடிவு செய்த மணமக்களின் பெற்றோர்கள். கொரானா மையத்திலேயே திருமணத்தை நடத்தி உள்ளனர்.
இந்த புகைப்படம் தற்போது ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் பார்வையாளர்களுக்கு தந்துள்ளது.