நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க தொழிலதிபர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் போன்றவர்கள் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவ நடிகர் சிவகார்த்திகேயன்,நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நிதி விளங்கியுள்ளனர்.கொரோனா தொற்று பாதிப்பால் வாழ்வாதாரம் முடங்கியுள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிகர்,நடிகையர் உதவ வேண்டும் என சங்கத்தின் அறக்கட்டளை குழு உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து நலிந்த கலைஞர்களுக்கு பலரும் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் 1 லட்சம் ரூபாய், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 50,000 ஆயிரம் ரூபாயும், நடிகை லதா 25,000 ரூபாயும், நடிகர் விக்னேஷ் 10 ஆயிரம் ரூபாயும் வழங்கியுள்ளனர்.
இவை அனைத்தும் நடிகர் சங்க வங்கி கணக்கில் நேரடியாக சேர்க்கப்பட்டுள்ளன. மதுரை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பைக்காரா பி.சசி தேவா சார்பில் 150 பேருக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.