உலகையே அச்சுறுத்தி வரும் கொரானோ. எங்கு பார்த்தாலும் ஊரடங்கு. கூட்டம் கூட்டமாய் எதை எதையோ தேடி திரிந்த மக்கள், தற்போது வாழ்க்கையை நாலு சுவற்றுக்குலேயே வாழ்ந்து வருகின்றனர்.
நாட்டுக்கு நாடு வல்லரசாக போட்டி போட்டுக்கொண்டிருந்த அரசாங்கம் தற்போது மக்களின் உடல் நலமே பெரிது என்பதை உணர்ந்து பொருளாதாரத்தை இழந்து மக்கள் நலமாக இருந்தால் போதும் என்று திருந்தி மக்களின் மேல் அன்பு செலுத்தி வருகிறது.
இதனால் பல லட்சம் பேர் வருமானத்தை இழந்தாலும், வறுமையில் வாடினாலும், இந்த கொரானோ நமக்கு கற்று கொடுத்த பாடம் எதுவும் நிரந்தரம் இல்லை, ஏழை பணக்காரன் என்று பாகுபாடு இல்லை, தனித்து இருப்பது தான் எப்போதும் சிறந்தது, சுத்தம் மட்டுமே எப்போதும் சோறு போடும் என பல.
சீனாவில் ஆரம்பித்த இந்த கொரானோ வைரஸ் அறிகுறி என்று இன்றளவும் நம்பப்படுவது சளி, காய்ச்சல் தான், ஆனால் தற்போது நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தாலும் அது கொரானோ அறிகுறி என்று சீன அரசு தகவல் தெரிவித்துள்ளது . எனவே நரம்பியல் சார்ந்த பிரச்சனை இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.