தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் காமெடி நடிகராக வலம் வருபவர் பிரேமானந்தம். இவர் தமிழ் சினிமாவில் கவுண்டமணி, வடிவேலு போன்று தெலுங்கில் மிகவும் புகழ்பெற்ற நடிகர்.
இவர் பாடி லாங்குவேஜ் பார்ப்பதற்கே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் இவர் தமிழில் மொழி படத்தில் நடிகர் பிருத்விராஜ் மற்றும் பிரகாஷ்ராஜ் உடன் இணைந்து நகைச்சுவை நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் பிரேமானந்தா சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்றும் சின்னத்திரை நாடகங்கள் பக்கம் கவனம் செலுத்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டோலிவுட்டில் தனது ஜனரஞ்சகமான நகைச்சுவையால் மக்களை சிரிக்க வைத்தவர் சினிமாவை விட்டு விலகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.