இலவச அரசு பஸ் பயணம் பெண்களுக்காக கேரளாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.. காங்கிரஸ் கூட்டணி புதிய அரசு அமைந்த கையோடு, இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது..
வரும் ஜூன் 15 முதல் அமலாகும் இந்த திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் அச்சப்படுகின்றனர்..
இதனால் தங்களுக்கு நேரிடும் வருவாய் இழப்பை தடுக்க, வழித்தட அனுமதி கட்டணத்தை குறைக்கக் கோரி முதலமைச்சரை சந்திக்க அவர்கள் திட்டுள்ளார்களாம்.
கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, ‘இந்திரா கேரண்டி’ திட்டத்தின் கீழ் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண வசதி வழங்குவதாகும்..
புதிய அரசின் முடிவின்படி, வரும் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் இந்த இலவச பயணத் திட்டம் மாநிலம் முழுவதும் அமலுக்கு வரவுள்ளது.. இத்திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசு போக்குவரத்து கழக (KSRTC) பேருந்துகள் மூலம் இந்த திட்டம் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட உள்ளது.. இந்த அறிவிப்பு பெண் பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மாநிலத்தின் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளன










