Tuesday, September 8, 2026
-- Advertisement--

பேருந்தில் ஏறிய முதல்வர் விஜய்.. பயணிகளிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வு!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சுமார் 127.21 கோடி ரூபாய் செலவில் புதிதாக வாங்கப்பட்டுள்ள 300 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ஆனால் இந்த விழாவின் ஹைலைட்டாக கொடியசைத்ததோடு நின்றுவிடாமல் திடீரென பெரம்பூர் நோக்கிச் செல்லும் 29A ரூட் புதிய பேருந்தில் ஏறிய முதல்வர் விஜய், அதில் சர்ப்ரைஸ் பயணம் மேற்கொண்டார்.

நாட்டிலேயே மிக சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்பைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்கி வரும் சூழலில், இதனை மேலும் மேம்படுத்த அரசு தொடர்ச்சியாகப் புதிய பேருந்துகளை வாங்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு போக்குவரத்துக் கழகங்களுக்காக இந்த 300 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன.

புதிதாக வாங்கப்பட்டுள்ள இந்த 300 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ஆனால் இந்த விழாவின் ஹைலைட்டாக கொடியசைத்ததோடு நின்றுவிடாமல் திடீரென பெரம்பூர் நோக்கிச் செல்லும் 29A ரூட் புதிய பேருந்தில் ஏறிய முதல்வர் விஜய், அதில் சர்ப்ரைஸ் பயணம் மேற்கொண்டார்.

பேருந்தின் முன்னிருக்கையில் அமர்ந்தபடி தனது மொபைலில் வீடியோ எடுத்தவாறு முதல்வர் விஜய் பயணித்தார். சாலையில் நின்றிருந்த பொதுமக்களை நோக்கி அவர் உற்சாகமாகக் கையசைத்தபடி பயணித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்குத் தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles