கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை முதல்வர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.
கோவை மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதியின் 10 வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் பார்த்திபன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைஅமைச்சர் சம்பத்குமார் சேலம் மாவட்டத்தில் நேற்று சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர். போக்சோ நீதிமன்ற உத்தரவின்பேரில், தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.










