தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், காமெடி நடிகர், தயாரிப்பாளர், மிமிக்ரி ஆர்டிஸ்ட் என பன்முக திறமை கொண்டவர் சின்னிஜெயந்த். இவர் கிழக்கு வாசல், ராஜா சின்ன ரோஜா, இதயம், வெற்றிவிழா, கண்ணெதிரே தோன்றினாள், டும்டும்டும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருக்கிறார்.
1980 இல் இருந்து 2000 வரை இவர் சிறப்பு நகைச்சுவை நடிகராக கலக்கி வந்தார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகராகவும் சின்ன திரையில் தோன்றினார் . கானல் நீர் என்ற படத்தின் மூலம் நடிகர் ஜெ கே ரிதிசை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.
இந்நிலையில் சின்னிஜெயந்த் மகன் சுதன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 889 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் நடிகர் சின்னிஜெயந்த் மகன் சுதன் ஜெயந்த் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75 வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பல பிரபலங்கள் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
