Saturday, April 1, 2023
-- Advertisement--

நான் சட்டை போடாமல் வெளியே போவேன்..நீ வருவியா? ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு சின்மயி ரிப்ளை…!!

சமீப காலமாக பல கதாநாயகிகள் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களும் பெண் அடிமையை எதிர்க்கும் வகையிலும் , பெண்களுக்கான சுதந்திரத்தை பற்றி பேசும் வகையிலும் நடித்து வருகின்றனர்.

நயன்தாரா, ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் போன்ற பல நடிகைகள் தற்போது இந்த ரூட்டை பிடித்து ஹீரோக்களுக்கு நிகராக முன்னேறி வருகின்றனர் . சின்ன சின்ன வேடங்களில் ஆரம்பத்தில் நடித்து அதன் பிறகு கதாநாயகியாக உயர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்த பல படங்கள் பல விருதை வாங்கி குவித்துள்ளனர். தமிழ்நாட்டு பெண்களுக்கே உரிய கலரும் அந்த அழகும் இவரிடம் உள்ளதால் அனைத்து ரசிகர்களையும் இவர் ஈர்த்துள்ளார்.

இவரும் சமீபகாலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளிவந்த டிரைவர் ஜமுனா படம் நல்லதொரு வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்பொழுது வேறு ஒருபெண் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இது குறித்த சமீபத்தில் அளித்த பேட்டியில் கடவுளுக்கு ஆண் பெண் பேதம் தெரியாது, அனைவரும் சமம், எந்த கடவுள் மாதவிடாயின் பொழுது கோயிலுக்கு வரக்கூடாது என்று சொன்னது என்று பேட்டி அளித்தார்.

இது மாபெரும் சர்ச்சையை கிளப்பியது இதன் காரணமாக ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்து பல மீம்ஸ்கள் தற்பொழுது இணையத்தில் உலா வருகின்றன. அதில் பல கேவலமான கமெண்ட்களை கொட்டி தீர்க்கும் வகையில் ஒருவர் என்ன ஆண் பெண் அனைவரும் சமமா? நான் சட்டை இல்லாமல் வெளியே வருவேன் நீ வருவியா? என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் சின்மயி ஒரு போஸ்ட் செய்துள்ளார். முதலில் இந்த அறிவிலியை கூப்பிட்டு வந்து ஒரு கிளாஸ் எடுக்க வேண்டும். இது போன்றோர் இருக்கும் வரை இந்த உலகம் திருந்தாது என்பது போல் ஒரு போஸ்ட் செய்துள்ளார். இந்த போஸ்ட் தற்போது போது வைரலாகி வருகின்றது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,534FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles