தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த படம் சிறுத்தை. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்து இருப்பார். இந்த படத்தில் சிறிய குழந்தை கதாபாத்திரத்தில் நடித்தவர் ரக்சனா.

இந்தப் படத்தில் இவரது நடிப்பு பலரால் பேசப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு ரக்ஷனா பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார். தமிழில் ஓகே கண்மணி, கடல், பாண்டியநாடு, திரிஷா இல்லனா நயன்தாரா, நிமிர்ந்து நில் போன்ற படங்கள் இவர் நடிப்பில் வெற்றியை பெற்றுத் தந்தன.

தற்போது இவர் மாடல் அழகி போட்டியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இதைப்பார்த்த ரசிகர்கள் சின்னஞ்சிறு குழந்தையாக நடித்தவர் இப்போது எப்படி வளர்ந்து விட்டார். செம அழகாக உள்ளார் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
