தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்திலேயே ஆக்கப்பூர்வமான மற்றும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள அவர், நேற்று தனது முதல் சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்றார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு தொடர்பான வாக்குறுதிகள் முக்கிய இடம்பிடித்திருந்தன. அதன் முதற்கட்டமாக, கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை நிரந்தரமாக மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோவில்களுக்கு மிக அருகில் அமைந்துள்ள மதுக்கடைகளைப் பட்டியலிட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் முதற்கட்ட ஆய்வின்படி, சுமார் 717 டாஸ்மாக் கடைகள் வரை உடனடியாக மூடப்பட உள்ளது. இது மதுவுக்கு எதிரான தவெக அரசின் கொள்கை முடிவின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் மூன்று மிக முக்கியமான அரசாணைகளில் விஜய் கையெழுத்திட்டுள்ளார்:
1. 200 யூனிட் இலவச மின்சாரம்
2. சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை
3.போதைப்பொருள் தடுப்புப் படை










