Friday, October 16, 2026
-- Advertisement--

முதல்வர் விஜய் அதிரடி.. 6 முக்கிய துறைகள் நேரடி கண்காணிப்பில்!

முதலமைச்சர் விஜய் பதவி ஏற்ற நாளில் இருந்து மிகவும் பரபரப்பாக காணப்படுகின்றார். முதலமைச்சராக பதவி ஏற்ற உடனே பள்ளி, கல்லூரி மற்றும் கோவில்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக்கடைகளை மூட உத்தரவிட்டார்.

இவரின் இந்த செயல்பாடு பலரது பாராட்டுகளை பெற்றது. அதனைதொடர்ந்து தற்போது ஆறு துறைகளை விஜய் நேரடி கண்காணிப்பில் வைத்திருக்க முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகின்றது.

ஆறு துறைகளின் செயல்பாடுகளை சிறப்பு அதிகாரிகளின் மூலம் முதலமைச்சர் விஜய் நேரடியாக கண்காணிக்க முடிவு செய்துள்ளாராம். டாஸ்மாக், போதைப்பொருள், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் விஜய் கூடுதல் கவனம் தேவை என முடிவெடுத்து இருக்கின்றார்.

சமூக தளங்களில் வரும் பிரச்சனைகள் மற்றும் பத்திர பதிவு துறை போன்ற ஆறு துறைகளில் சிறப்பு அதிகாரிகளை விஜய் நியமிக்க இருக்கின்றார். ஆறு துறைகளில் காவல்துறை தலைமையகத்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த துறை குறித்து நேரடியாகவே காவல் தலைமையகத்தில் இருக்கும் சிறப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டுமாம். ஒவ்வொரு நாளும் சிறப்பு அதிகாரிகளுக்கு தகவல் செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கின்றது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தொடர்ந்து தவெகவினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மது மற்றும் போதை பொருள் கலாச்சாரம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே தமிழ்நாட்டில் இதுபோன்ற விஷயங்கள் கட்டுக்குள் வர வேண்டும். குறிப்பாக மிக முக்கியமாக பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால் தமிழ்நாட்டின் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய பட வேண்டும். மது மற்றும் போதைப்பொருள் பழக்கம் அடியோடு ஒழிய வேண்டும் என்பது தான் அனைவரது விருப்பமாகவும் உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles