பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைத் துறை ஒதுக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து தெரிவித்த கருத்துக்கு பதிலடி தந்துள்ள நடிகர் கிருஷ்ணா, “நம் முதல்வரும் புதியவர்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஷால் பதிவை மேற்கோள் காட்டி நடிகர் கிருஷ்ணா தனது எக்ஸ் தளத்தில், “விஷால் அவர்களே, அமைச்சர் ராஜ்மோகனையோ அல்லது அவரது திறன்களையோ குறைத்து மதிப்பிடாதீர்கள்.
அவர் தனது துறையை எவ்வாறு நிர்வகிக்கப் போகிறார் என்பதை அறியாமலே அவரது அமைச்சகத்தின் செயல்பாடுகளை உங்களால் எவ்வாறு மதிப்பிட முடியும். நம் முதல்வரும் தனது பணிக்குப் புதியவர்தான். ஆனால், அந்த விஷயத்தில் மட்டும் உங்களுக்கு ஏன் எந்தக் கருத்தும் இல்லை










